இன்று நள்ளிரவு அமுலுக்குவரும் தடை – மீறினால் நடவடிக்கை!
Tuesday, July 30th, 2019
உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவது இன்று நள்ளிரவுடன் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.
இதேவேளை, க.பொ.த உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன இன்று நள்ளிரவிற்கு பின்னர் நடத்தப்படுமாயின் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதுடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 4ஆம் திகதி நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தொடர் மழை: இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு!
மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – பாரதப் பிரதமர் அறிவிப்பு!
|
|
|


