இன்று ஜனாதிபதி பிரித்தானியா பயணம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியா மற்றும் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளார்.
இலண்டனில் நடைபெறும் ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளார்.நாளையதினம் குறித்த மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஜனாதிபதி மைத்திரிபால ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிற்கான விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேஷில் நடைபெறவுள்ள கும்பமேளா கலாசார நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துக்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.
இதனை அடுத்து காஞ்சி பகுதிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள அநகாரிக தர்மபாலவின் உருவச் சிலையையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டள்ளது.
Related posts:
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுங்கள் - அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும்...
தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளும் அடுத்த வாரம் தளர்த்தப்படும் ...
மின் கட்டண திருத்தம் - யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சா...
|
|