இன்று கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 442 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இன்றைதினத்தில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காது!
ரணில் விக்ரமசிங்கவை விட பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் எம்மிடம் இல்லை - அமைச்சர் நிமல் சிறிபால டி சி...
பாரதிபுரம் ஆடை தொழிற்சாலையை மீள இயங்க கரைச்சி பிரதேச செயலர் தலைமையில் ஆலோசனை - அமைச்சர் டக்ளஸ் தேவா...
|
|