இன்று உலக தபால் தின நிகழ்வுகள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையில் 143 உலக தபால் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு, பொலனறுவை புத்தி மண்டபத்தில் இன்றைய தினம்(09) நடைபெறவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் தபால் தினத்தில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.தபால் தினத்திற்காக இரண்டு புதிய முத்திரைகள் வெளியிடப்பட உள்ளன.சிறு மற்றும் மத்தியதர முயற்சியான்மையாளர்களின் உற்பத்திகளை விற்பனை செய்யும் நோக்கில் புதிய இணைய தளமொன்றையும் தபால் திணைக்களம் இன்று அறிமுகம் செய்ய உள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்
Related posts:
ரயில் சேவைகள் ரத்து - ரயில்வே கட்டுப்பாட்டு மையம்!
நாடாளுமன்ற அறிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் பெற நடவடிக்கை - சபாநாயகர்!
கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுக்கள் ஜூலைக்குள் நிறைவு செ...
|
|