இன்று இலங்கை வந்தடையும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றி மற்றுமொரு கப்பல் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தகவல்!
Saturday, May 14th, 2022
40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் கடனுதவியின் கீழ் இந்த எரிபொருள் இலங்கைக்கு வரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மலேசிய உதவிப்பிரதமர் இலங்கை வருகை!
அனைத்துக் குடும்பங்களுக்கும் பொருத்தமான வீடுகளைப் பெற்றுத் தரக்கூடிய சூழல் உருவாக்கித் தரப்படும் – ஜ...
நாடாளுமன்றத்தில் மேலும் பல இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் - விடுக்கப்பட்டது கோரிக்கை!
|
|
|


