இன்றும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்படி பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
காணாமல் போதல் , கடத்தல் சம்பவங்களை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பார்க்கப்பட வேண்டும்!
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
தவறான தகவல்களைப் பரப்பி மக்களை குழப்பி வரும் சிலர் - தமது தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்காக மக்களை தூண்ட...
|
|