இன்றும் நாடாளுமன்றம் கூடியது!
Wednesday, December 5th, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற அமர்வு இன்று (05) காலை 10.30 மணிக்கு ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரலை மாற்றி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தரப்பினர் கூட்டத்தை புறக்கணித்துள்ளதுடன் இன்றைய நாடாளுமன்ற அமர்வினையும் தாங்கள் புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய பிரதமரிடம் பல கோரிக்கைகளை முன்வைக்கவுளோம் - கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்
அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று பிரதமர் தலைமையில் ஆரம்பம்!
பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி - டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ...
|
|
|


