இன்றுமுதல் யாழ் பேருந்து சேவையில் மாற்றம் – எ-9 வீதியூடாக மற்றும் பருத்தித்துறை வீதி ஊடாக வரும் பேருந்துகளும் வைத்தியசாலை வீதியூடாக உள் நுழையவும் தடை!

Tuesday, November 8th, 2022

யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து சேவைகள் இன்றமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் கடந்த 2 வருடங்கள், சேவைகள் இடம்பெறவில்லை. பல இழுபறிகள் காணப்பட்டன. இந்த நிலையில் இன்றையதினம் (08-11-2022) முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.

இதன் அடிப்படையில் நெடுந்தூரம், மற்றும் உள்ளூர் மினி வான் தனியார் சேவைகளும் இன்றுமுதல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இடம்பெறவுள்ளன.

இதே போன்று எ.9 வீதியூடாக வரும் பேருந்துகள் மற்றும் பருத்தித்துறை வீதி ஊடாக வரும் பேருந்துகளும் வைத்தியசாலை வீதியூடாக இனி உள் நுழைய முடியாது. அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது.

அனைத்து பேருந்துகளும் கே.கே,எஸ் வீதியூடாகவே உள் நுழைய முடியும் என்றும் இந்த நடைமுறை மிக இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் என்பதால அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: