இன்றுமுதல் பொதுமன்னிப்பு காலம் ஆரம்பம் – பாதுகாப்பு அமைச்சு!

Wednesday, February 5th, 2020

பல்வேறு காரணங்களினால் சட்டத்திற்கு முரணானவாறு முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்கள், அதில் மீண்டும் இணைவதற்கும் அல்லது சட்ட ரீதியாக விலகுவதற்குமான பொதுமன்னிப்பு காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.

அதன்படி எதிர்வரும் 7 நாட்களுக்கு இந்த பொது மன்னிப்பு காலம் அமுலில் இருக்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து விலகிச் சென்றவர்களுக்காக இந்த பொது மன்னிப்பு காலம் ஏற்படையதாகும்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால், இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: