இன்றுமுதல் திங்கட்கிழமை வரை மின் வெட்டு கிடையாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
 Saturday, December 24th, 2022
        
                    Saturday, December 24th, 2022
            
பண்டிகைக் காலம் கருதி இன்று டிசம்பர் 24, நாளை (25) நாளை மறுதினம் 26 ஆகிய தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்ததோடு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேள, எதிர்வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01ஆம் திகதி ஆகிய நாட்களிலும் மின் வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 2023 முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படும் கருத்துகளில் எவ்வித உண்மையுமில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதன்போது தெரிவித்திருந்தார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        