இன்னுமொரு தேசிய சபையை அமைக்க சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

நாடாளுமன்றத்தை போன்று இன்னொரு தேசிய சபையை அமைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என சபைத் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான முயற்சி நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவெளை நாடாளுமன்றத்திற்கு நிகரான தேசிய சபையை நடத்துவதற்கு கடந்த சில வாரங்களாக ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும் அது அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் மாற்றப்பட வேண்டும் என்றால் வாக்களிப்பின் மூலம் செய்ய வேண்டும். எனவே, இவ்வாறான முயற்சிகள் சட்டவிரோதமானது மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் செயலாகும்.
இதன்படி, நாடாளுமன்றத் தலைவரால் எழுப்பப்பட்ட விடயம், நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|