இனவாத மதவாத ரீதியில் பிரசாரம் செய்ய முடியாது – கபே அமைப்பு!
Sunday, January 14th, 2018
புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் இனவாத, மதவாத ரீதியிலான பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதெனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்புத் தெரிவித்துள்ளது.
இனவாத, மதவாத ரீதியிலான பிரசாரங்களும் இந்தத் தேர்தலில் முன்னெடுக்கப்படுகின்றன.
இது தொடர்பான முறைப்பாடுகளும் எமக்குக் கிடைத்துள்ளன. அதில் சிவசேனை என்ற இந்து அமைப்பு கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென்று கோரியுள்ளது
அதேபோன்று தென்னிலங்கையிலுள்ள பௌத்த மதகுருமார்கள் அமைப்பு புதிய அரசமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாமென்று மக்களைக் கோரியுள்ளது.
ஆனால் யாருமே மத, இன ரீதியிலான பிரசாரங்களில் ஈடுபட முடியாது. புதிய தேர்தல் முறைமையின் ஊடாக மத, இன ரீதியாகச் செயற்பட முடியாது என்பதுடன், அபிவிருத்தி நோக்கியே செயற்பட வேண்டும் என்றார்.
Related posts:
எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!
ஒரு வாரத்தில் சுங்கத்த திணைக்களத்திற்கு 9 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் – சுங்கத் திணைக்கள...
நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வு முன்னெடுப்பு!
|
|
|


