இந்த ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது – அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர் –அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டு!
Monday, January 31st, 2022
அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல் எதிரணிகளின் பகல் கனவும் பலிக்காது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
இன்று சமூகவலைத்தளங்கள் பக்கம் சென்றால் அநுரகுமார திஸாநாயக்கதான் அடுத்த ஜனாதிபதி, ஆட்சி அமைப்பது தொடர்பில் சஜித் பேச்சு என்றெல்லாம் பதிவுகள் உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள்தான் நாட்டைச் சீரழித்தனர். நாட்டு வளங்களை விற்பனை செய்தனர்.
சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு எதிராக பிரசாரம் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னும் 6, 7 மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும்.
கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிவரும். இந்த ஆட்சியின் கீழ் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது. அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


