இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பு இல்லை என அறிவிப்பு!

இந்தோனேஷியாவின் தெற்கு சுமாத்ரா தீவில் பாரிய நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசரிதவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.59 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடற்பரப்பில் இருந்து 163 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
எனினும் இந்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு எதுவித சுனாமி ஆபத்தும் இல்லையென தேசிய இலங்கை சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்த நில அதிர்வு காரணமாக இலங்கைக்கு எவ்வித ஆபத்துக்களும் இல்லை எனவும் கடலுக்கு அருகில் வாழும் மக்கள் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்!
பாரத பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!
வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட...
|
|