இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழை – 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணக்கை 32 ஆக அதிரித்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பதிவான கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்ததுடன் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
இதில் வீதிகள், 1,500 க்கும் மேற்பட்ட வீடுகள், மற்றும் வழிபாட்டு தலங்கள் நாசமாகியுள்ளன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 5 பகுதிகளில் பேரிடருக்கான நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 70,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இதனிடையே காணாமல்போன பலரை தேடும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
திறமையானவர்கள் அரசாங்க வேலைக்கு வருவதில்லை – வடக்கின் ஆளுநர் குரே!
அரசாங்கம் விருப்பத்துடன் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை - கொரோனாவுடன் போராடும் அதேவேளை, அபிவிருத்திகள...
தாய் நாட்டிற்கு வருமாறு கோட்டாபய ராஜபக்சவிடம் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!
|
|