இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் – நாளையதினம் ஒன்றிணையுமாறு அழைப்பு!
 Thursday, March 30th, 2023
        
                    Thursday, March 30th, 2023
            
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகங்களில் அண்மைய நாட்களில் இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், இது தொடர்பில் வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமயம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தா சபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் குறித்த இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்கு மேற்குறிப்பிட்ட அமைப்புக்களைச் சார்ந்த மூன்று பிரதிநிதிகளை தவறாது சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் மூலம், தற்போது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள இந்துக் கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் சைவ மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        