இந்திய வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை – அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, October 11th, 2021

அரசியலமைப்பின் 13 வது திருத்தம் அல்லது திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்திய வெளியுறவு செயலாளரின் இலங்கை வருகை தொடர்பாக பல்வேறு தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

இதேவேளை கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு இதுவரை எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இந்த விடயம் இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு நாட்டுக்கு நன்மை பயக்கும் ஒரு முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

திருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு - பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை!
மின் கட்டண அதிகரிப்புக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய திட்டம் - மின்சக்தி மற்றும் எரி...
மீண்டும் கியூ.ஆர்.குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் - அமைச்சர் ...