இந்திய வெளியுறத்துறை அமைச்சரை சந்தித்தார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!
Monday, March 28th, 2022
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்..
இருதரப்பு பேச்சுவார்த்தைக்காகவும், கொழும்பில் நடைபெறும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் ஜெய்சங்கர் நேற்று இரவு இலங்கை வருகைதந்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் ஆதரவான பதில் குறித்து இரு அதிகாரிகளும் விவாதித்ததாக இந்திய அமைச்சர் குறிப்பிட்டிருந்த்தார்.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்காலத்தில் இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நிதியுதவி வழங்க இந்தியாவின் விருப்பம் குறித்து ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தது.
எரிபொருள், எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உட்பட பல அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு இந்த கடன் உதவி வழங்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பல நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


