இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விகரம சிங்க இரங்கல்!
Sunday, June 4th, 2023
இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் துயரமான இந்த தருணத்தில் அயல் நாட்டவர்கள் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம் எனவும் உறுதியளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேநேரம் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத விதமாக விபத்துக்கு முகம்கொடுத்துள்ள இந்திய அரசாங்கத்திற்கு வலிமையும் தைரியமும் கிட்ட வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதியின் விசேட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


