இந்திய துணைத்தூதுவர், வடக்கு மாகாண ஆளுந சந்திப்பு – இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரும் ஆளுநருடன் கலந்துரையாடல்!.
Thursday, January 11th, 2024
இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது.
நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல், பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றுலா துறை அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று (10.01.2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில்ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன் வடக்கில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள பசுமை சக்திவள திட்டங்கள், பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


