இந்திய கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை ஆரம்பம்!

Saturday, January 23rd, 2021

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 இதன்படி, குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் மூன்று பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் போது எதிர்கொள்ளக்கூடிய நடைமுறை ரீதியான சிக்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

பிலியந்தலை, பிலியந்தலை பிரதேச வைத்தியசாலை, மற்றும் கொழும்பு-வடக்கு போதனா வைத்தியசாலைகளில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கை அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஈ.பி.டி.பியின் யதார்த்த அரசியல்அணுகு முறையேஎமது மக்களின் எதிர்காலத்தை பலமானதாக கட்டியெழுப்பும் - உன்...
சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!
சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்க இந்திய பிரதமர் இணக்கம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!