இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே ஆதரவு – இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட அறிவிப்பு!
Tuesday, September 26th, 2023
இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே தாம் ஆதரவை வழங்குவோம் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.
சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக கனடா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
கனடா முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானது என மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில், பயங்கரவாதம் குறித்து சிறிதளவு கூட சகிப்புத் தன்மையை வெளிப்படுத்தக் கூடாது எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காணாமல் போயிருந்த வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
25 ஆவது சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று!
பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜப...
|
|
|
பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி உள்வாங்க பொறிமுறை - இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலை...
பயணிகளுக்கு பயணச் சீட்டை வழங்க அனுமதி கோருகிறது புகையிரத திணைக்களம் – நாளை தீர்வு கிட்டும் என எதிர்ப...
மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின் தடை ஏற்படக்கூடும் ...


