இந்தியா – இலங்கை – இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Friday, September 30th, 2022

கல்வி மற்றும் திறன் பயிற்சிகளில் இந்தியாவும் இலங்கையும் ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரத்தில் இலங்கைக்கான பங்காளித்துவத்தை மாற்றுவதற்கான இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான நிகழ்வின்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..

இலங்கைக்கான ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் சுமார் 700 புலமைப்பரிசில்கள் தவிர, இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையில் கூட்டாண்மை மூலம் உயர்கல்வி உட்பட கல்வித் துறையில் இலங்கைக்கு உதவுவதற்கான முயற்சியை இதன்போது உயர்ஸ்தானிகர் எடுத்துரைத்தார்.

இந் நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க ஆகியோர் பங்கேற்றனர்.

000

Related posts: