இந்தியா, இலங்கைக்கு வழங்குகிறது மற்றுமொரு முக்கிய சலுகை!
Friday, May 20th, 2022
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா (எஸ்பிஐ) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் காலக் கடனை ரூபாய் அடிப்படையில் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நேற்று இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய வங்கி, அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இது நடைமுறை உடனடியாகவே நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழமையான ஏற்பாட்டின்படி, இந்த கடன் மீள்செலுத்துகை, டொலர், யூரோ அல்லது யென் நாணயங்கள் மூலமே செலுத்தப்படுதல் வேண்டும் என்பது கறிப்பிடத்தக்கது..
000
Related posts:
கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!
திருகோணமலை விமானப்படை தளத்திற்கு இந்திய விமானப்படை ஆதரவு – பிரதமரு;னான சந்தரிப்பில் இந்திய விமானப்பட...
உயர்தரப் பரீட்சைக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
|
|
|


