இந்தியாவுடன் இலங்கை ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் – சொல்கிறது அமெரிக்கா!
Monday, October 17th, 2016
சர்வதேச ஒழுங்குகளை பின்பற்றி சுதந்திரமான கடற்பயணங்களை மேற்கொள்ள இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு அவசியம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை உதவிச்செயலாளர் மான்பிரீட்சிங் ஆனந்த் இதனை வலியுறுத்தியுள்ளார்.இதன்மூலம் குறித்த நாடுகளால் கடற்கொள்ளையர்கள், மற்றும் போதைவஸ்துக்கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக செயற்படமுடியும் என்று ஆனந்த், பிடீஐயிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உலக பொருளாதார ஸ்திரநிலையையும் இந்து சமுத்திர பாதுகாப்பையும் பிரிக்கமுடியாது என்று ஆனந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
இன்று நள்ளிரவுமுதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் ஷெய்க் ஹசீனாவால் மக...
அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக கடற்றொழிலா...
|
|
|


