இந்தியாவுடனான தொடர்புகளை மிகவும் வித்தியாசமானது – பிரதமர்!

இலங்கை எப்போதும் சீனாவுடன் நட்புறவைப் பேணியது. ஆனால், அது இந்தியாவுடனான தொடர்புகளை விட மிகவும் வித்தியாசமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை – சீன நட்புறவின் காரணமாக இலங்கை – இந்திய தொடர்புகளுக்கு பாதிப்பு இல்லை என்றும் பிரதமர் சுட்கெ;காட்டினார்.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஊடகவியலாளர் பத்மராவ் சுந்தர்ஜியுடனான நேர்காணலில் பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.;
திருகோணமலை துறைமுகத்தை ஜப்பானின் உதவியுடன் அபிவிருத்தி செய்யக்கூடிய விதம் பற்றியும், இந்தியாவின் ஒத்துழைப்பை பெறும் விதம் பற்றியும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இருநாடுகளும் வங்காள விரிகுடா பிராந்தியம் பொருளாதார அபிவிருத்தி காண்பதை விரும்புகின்றன. எதிர்வரும் 10 ஆண்டுகளில் இந்தப் பிராந்தியம் கூடுதல் வாய்ப்புக்களைக் கொண்ட பரிணமிக்குமென பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையும் இந்தியாவும் சிறந்த பாதுகாப்பு, பொருளாதார உறவுகளைப் பேணுகின்றன. இது இருதரப்பு உறவுகளைப் பொறுத்த வரையில் சிறந்ததொரு யுகமாக காணப்படுகிறது என்று தெரிவித்த பிரதமர் இலங்கை ஏனைய நாடுகளுடனும் உறவுகளைப் பேணுகிறது. எனவே, சீனாவுடனான உறவுகள் பற்றி அச்சமடையத் தேவையில்லைஎன்றார்
Related posts:
|
|