இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்வுள்ளார் ஜனாதிபதி!
Sunday, September 18th, 2016
இந்திய கோவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு முக்கிய பொருளாதாரத்துறை கூட்டங்களில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.
இதில் ஒரு கூட்டம் வங்காள விரிகுடாவின் பன்முக வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பினால் (BIMSTEC) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கூட்டம், பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டான (BRICS) பிரிக்ஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஒக்டோபர் 18ம் திகதியன்று இலங்கையில் இருந்து புறப்படுகிறார்.

Related posts:
யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பம் காரணமாக 13 ஆயிரத்து 841 பேர் பாதிப்பு புள்ளிவிபரத் தகவலில் சுட்டிக்காட...
எதிர்வரும் செவ்வாய் முதல் இலங்கை - நேபாளத்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை!
பெண் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுப்பு - யாழ்ப்பாணத்தில் 6 இடங்களில் நடைமு...
|
|
|


