இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

வைத்திய நோக்கத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு சென்றிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும், இரண்டாயிரம் கட்டில்களைக் கொண்ட கொவிட் மத்திய நிலையத்தை அமைச்சர் பார்வையிட்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்..
இதனிடையே இந்தியாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை, இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்று நாடுகளிடமிருந்து மின்வலுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
இலங்கையில் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சிறப்புக் கண்காட்சி - எயர் வைஸ் மார...
|
|