இந்தியாவிலிருந்து 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் – அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Thursday, June 9th, 2022
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம், அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவை இந்தியாவின் தேவைக்காக ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் தெரிவித்த அமைச்சர் எனினும், இலங்கை விவசாயிகள் எதிர்நோக்கும் உரத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு யூரியா உரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த உரத் தொகை கிடைத்ததும் அவற்றை உடனடியாக 2, அல்லது 3 நாட்களுக்குள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சிறுபோகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு பொதி யூரியா உரத்தை 10,000 ரூபாவிற்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
4 ஆம் நிலையில் இலங்கை : பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரி...
பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்பட...
எதிர்வரும் மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
|
|
|


