இந்தியாவிலிருந்து 2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி – யூரியாவை விட சிறந்த பயனை வழங்கும் என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Sunday, October 17th, 2021
இந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட இரசாயன திரவ உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலையீட்டுடன் இந்தியாவின் குஜராத் மாநில நிறுவனம் ஒன்றிடமிருந்து திரவ பசளை கொள்வனவு செய்யப்படவுள்ளது.
அத்’துடன் சர்வதேச ரீதியில் உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சிறந்த பயனை வழங்கக்கூடிய வகையில் நனோ நைட்ரஜன் பசளை காணப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது பயன்படுத்தப்படும் யூரியா பசளையை விட சிறந்த பயனை திரவ சேதன பசளை வழங்கும் என விவசாய அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக 1200 கோடி!
மனிதநேயம் மிக்க செயல் - யாழ்ப்பாணத்து இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்!
அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதன் மூலம் இலங்கை மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது ...
|
|
|


