இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொடருந்து பெட்டிகள்!
Friday, July 13th, 2018
இந்திய தொடருந்து திணைக்களத்தினால் இலங்கைக்கு 600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான தொடருந்து பயணப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமாக 78 நவீன தொடருந்துப் பெட்டிகள் அடங்கிய 6 தொகுதிகள் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல்கட்டமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 தொகுதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. ஏனையவை இந்த வருட இறுதிக்குள் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தொகுதியில் வளிபதனாக்கி பொருத்தப்பட்ட முதற்தர பயணப்பெட்டிகளும், 2ஆம் மற்றும் மூன்றாம் வகுப்புப் பெட்டிகளுமாக அமைக்கப்பட்டுள்ளன.
Related posts:
இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பி...
தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்களும் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு!
வவுனியா, மகாறம்பைக்குளம் கிழக்கு மற்றும் மதினாநகர் மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு – 2.4 மில்லியன் ...
|
|
|


