இந்தியாவின் 69வது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது!

இந்தியாவின் 69வது குடியரசு தினம் இன்று (26) யாழில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள துணைத்தூதுவரின் “இந்தியன்” இல்லத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் குடியரசு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இந்தியத்துணைத்தூதுவர் ஆறுமுகம் நடராஜன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.
ஆதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசு தலைவர் சிறி ராம்நாத் கோவிந்தின் குடியரசு தின உரையாற்றி வாசித்ததுடன், தனது உரையினையும் ஆற்றியிருந்தார்.
ஆதனைத் தொடர்ந்து, இந்தியா அசாம் மாநிலத்தில் இருந்து வருகை தந்த பிகு நடன குழுவினரின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Related posts:
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
இலங்கையில் இருந்து 33 உணவு ஏற்றுமதிக்கு சீனா அனுமதி - சீனக் குடியரசின் சுங்க நிர்வாகத்திற்கும் இலங்க...
சிக்கல்களை ஏற்படுத்திய மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
|
|