இந்தியப் பிரதமரின் செயலக மட்ட உயரதிகாரிகள் மூவர் யாழ். விஜயம்!
Thursday, June 16th, 2016
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயலக மட்ட உயரதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் இன்று-16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை யாழ். குடாநாட்டிற்கு விஐயம் செய்தனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில் நவீனமயப்படுத்தப்பட்டு வரும் யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கினைக் குறித்த குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் இந்திய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டப் பணிகளையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
குறித்த குழுவினருடன் இந்தியத் துணைத் தூதுவர் அ.நடராஐன் மற்றும் தூதரக அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.


Related posts:
அமெரிக்க உதவி செயலாளர் சாள்ஸ் எச். ரிவ்கின் இலங்கை வருகை!
பிரச்சினை மக்களுக்கு இல்லை; அரசியல்வாதிகளுக்கே உள்ளது - வடமாகாண ஆளுநர் ரெயினோல்ட் குரே!
இலங்கையின் மொத்த அந்நிய செலாவணியில் 40 வீதம் தமிழா்கள் ஈட்டித் தருகின்றனர் - வடக்கின் ஆளுநர் !
|
|
|


