இந்தமுறையும் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டம் கிடையாது!
Monday, November 20th, 2017
தேர்தலின் போது வேட்பாளர்களும் கட்சிகளும் செலவிடும் நிதியை வரையறை செய்யும் சட்டம், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அமுலாக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் இன்னும் நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றப்படவில்லை என்பதால், இதனை இந்தமுறை அமுலாக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் தேர்தல் செலவினத்தை வரையறை செய்யும் நோக்கம் அரசாங்கத்திடம் இருப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க அண்மையில் கூறி இருந்தார். செலவினங்களை வரையறை செய்யுமாறு, பெஃப்ரல் அமைப்புஉள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நிறைவு!
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ் வண்டிகளின் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைப்பு!
ஜனாதிபதி ஜப்பான் பயணம் - ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமனம்...
|
|
|


