இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இராஜதந்திர சந்திப்புகளிலும் பங்கேற்பு!
Friday, September 10th, 2021
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 649 என்ற விமானத்தில், பிரதமருடன் 16 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இத்தாலிக்கு பயணமாகியுள்ளனர்.
அவர்கள், ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய்க்கு சென்று, அங்கிருந்து பிரிதொரு விமானம் மூலம் இத்தாலிக்கு பயணிக்கவுள்ளனர்.
போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தும் முகமாகவே குறித்த விஜயம் அமைந்துள்ளது.
மேலும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டும் பிரதமரின் குறித்த இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
தவறுகளை திருத்தி புதிய அரசியல் பயணம் – நாமல்!
இன்று 02 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களுக்குமின்வெட்டு - ஜூன் 05 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்த...
வடபகுதியில் சுபிட்சமான நிலை ஏற்படுத்த முனைகின்றோம் - ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்...
|
|
|


