இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை – தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன யாழ்ப்பாணத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் தெரிவிப்பு!
Thursday, October 15th, 2020
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மித்த பகுதியிலிருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் 13 ஆம் திகதி குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து ஆர்.டி.எக்ஸ் மற்றும் ரி.என்.ரி மருந்து கலக்கப்பட்ட சுமார் 4 கிலோ வெடிபொருட்களும் 10 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சை இலகுபடுத்தலை ஆராயக் குழு நியமனம் - பரீட்சைத் திணைக்களம்!
பாலியல் இலஞ்சம் கோரும் சிறைச்சாலை அதிகாரிகள்!
கொரோனா அச்சம்: மீண்டும் பாடசாலைகளுக்க விடுமுறை கொடுப்பது குறித்து கல்வி அமைச்சு ஆலோசனை!
|
|
|


