இணையவழி பேருந்து ஆசனங்களை ஒதுக்கும் வசதி!
Tuesday, July 17th, 2018
பயணிகள் இணைய வழியாக பேருந்து ஆசனங்களை ஒதுக்கிக் கொள்வதற்கான சேவை விஸ்தரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் எஸ்.எல்.ரி.பி.எக்ஸ்பிரஸ் என்ற சேவையின் ஊடாக இந்த வசதி கிடைக்கிறது.
இணைய வசதிகளைக் கொண்ட திறன்பேசிகள் அல்லது கணனியின் ஊடாக இதற்குரிய செயலியைப் பயனப்டுத்தி கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இதன் மூலம் புறக்கோட்டை பஸ் நிலையத்திற்குச் சென்று ஆசனங்களை ஒதுக்கிக்கொள்வதற்கான பண விரயமும், நேர விரயமும் தவிர்க்கப்படுவதாக போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
Related posts:
நாட்டிலுள்ள துறைமுகத்தின் பாதுகாப்பினை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் சாகல!
பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் ஷெய்க் ஹசீனாவால் மக...
இந்தியா - இலங்கயை இணைக்க நவீன பாலம் - பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்த...
|
|
|


