இணையத்தளம் ஊடாக வங்கிக்கணக்கிலிருந்து ஒரு கோடி ரூபா கொள்ளை – எண்மர் கைது!
Wednesday, November 30th, 2022
தனியார் வங்கியொன்றிலுள்ள, இரண்டு கணக்கிற்குள், இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமாக ஊடுருவி, ஒரு கோடியே 37 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின், நிதி மற்றும் வணிகக் குற்ற விசாரணைப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, வாத்துவ, பிலியந்தலை, பண்டாரவளை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 22 – 36 வயதுக்கு இடைப்பட்ட, காலி, வெலிகம, ரத்கம, வாத்துவ மற்றும் பட்டியகெதர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
போலி முகப்புத்தகங்கள் தொடர்பில் முறையிடவும்!
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 11 விபத்து பேர் மரணம் - யாழ்.போதனா வைத்தியசாலை!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நடைமுறையால் இலங்கை பொதுப் போக்குவரத்து துறைக்கு 3 ஆயிரத்து 447 மில்லியன...
|
|
|
சிறந்த சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது – ஜனாதிபதி!
இலங்கையை பொருளாதார நாடாக மாற்றுவதற்கு தயாரிக்கப்பட்டது திட்டம் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசி...
தொடர் மழை - வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரி...


