இடைக்கால அனர்த்த முகாமைத்துவ திட்டம் பரீட்சை ஆணையாளருக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரால் சமர்ப்பிப்பு !
Tuesday, May 16th, 2023
பரீட்சை காலத்தில் சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களின் இடையூறுகளை குறைப்பதற்காக தயாரிக்கப்பட்ட இடைக்கால அனர்த்த முகாமைத்துவ திட்டம் பரீட்சைகள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் நேற்று குறித்த திட்டம் கையளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இந்த மாதம் 29ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை 3 ஆயிரத்து 568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
எனவே, தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழைக் காலத்தில் ஏற்படக்கூடிய தீவிர காலநிலை தாக்கத்தினால் ஏற்படக் கூடிய இடையூறுகளை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு டெங்கு நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை காலத்தில் பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முற்கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளழட குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


