இடியுடன் கூடிய பெரும் மழையும் காற்றும் வீசக் கூடிய நிலை நீடிக்கும் சாத்தியம் : கடலுக்குச் செல்லும் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்

Monday, May 16th, 2016

இடியுடன் கூடிய பெருமழையும் , கடும் காற்றும் வீசக் கூடிய நிலை இன்று திங்கட்கிழமையும் (16-05.2016) நீடிக்கும் சாத்தியம் காணப்படுவதால் கடலுக்குச் செல்லும் மீனவர்களை அவதானமாகவிருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்றுத் தொடங்கிய இடியுடன் கூடிய பெரும் மழை இன்றும் தொடரும் சாத்தியமுள்ளது. இதினால் கடல் கொந்தளிப்புடன் அலைகளின் தாக்கமும் அதிகமாகவிருக்கும் . அம்பாந் தோட்டையிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன் துறை வரையான கடற்பரப்புக்களில் மணிக்கு 40 தொடக்கம் 500 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்  கூடும்,சில வேளைகளில் இதன் வேகம் மணிக்கு70 தொடக்கம் 80 கிலோ மீற்றராக அதிகரிக்கவும் கூடும். எனவே, மீன் பிடி நடவடிக்கையில் ஈடுப்படும் மீனவர்களை மிக அவதானத்துடன் செயற்படுமாறும் அகவர் கேட்டுள்ளார்.

 

Related posts:


க.பொ.த பரீட்சைகளின் விடைத்தாள்களை பாடசாலை விடுமுறை காலத்திற்குள் திருத்தி முடிப்பதற்கு நடவடிக்கை- கல...
கற்பனையில் பற்றாக்குறை பற்றி பேசுகிறார்களா என்று எமக்கு தெரியவில்லை - போதுமான அளவு இருப்பு உள்ளது என...
நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் - ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ர...