இடப் பற்றாக்குறை : வெளிநாட்டிலிருந்து வருபவர்களை ஹொட்டல்களில் தனிமைப்படுத்தும் செயற்திட்டம் ஆரம்பம்: இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Sunday, May 3rd, 2020

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப் படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக தனிமைப்படுத்தபடுபவர்கள் ஹொட்டல்களிற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படும் ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவிக்கும் இலங்கையர்களே நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பிரித்தானியாவிலிருந்து 260 பேர் இலங்கை திரும்பிய நிலையில் அவர்கள் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள ஹொட்டல் உரிமையாளர்கள் தமது ஹொட்டல்களை தனிமைப்படுத்தல் மையங்களாக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹொட்டல் உரிமையாளர்கள் இதை இலாப நோக்கத்துடன் செயற்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் ஹொட்டலில் உணவு மற்றும் தேநீர் உட்பட ஒரு நாளைக்கு 7500 ரூபா வசூலிக்கப்படவுள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.

வழக்கமாக ஒரு ஹொட்டலில் ஒரு அறை சுற்றுலா பயணிகளுக்கு 20,000 – 35,000 ரூபா வரை வசூலித்த நிலையில், தனிமைப்படுத்தல் திட்டத்திற்காக குறைந்த கட்டணம் அறவிடப்படுகிறதாகவும் இராணுவத்தளபதி மேலும் கூறியுள்ளார். அத்துடன் தனிமைப்படுத்தல் திட்டத்திற்கு இணக்கம் தெரிவிப்பவர்கள் மட்டுமே நாடு திரும்ப முடியும் என்றும், ஹொட்டல் தனிமைப்படுத்தல் திட்டங்களை இராணுவம் மேற்பார்வை செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஏற்றுமதி பயிர்களான கித்துள் மற்றும் பனை உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிப்பத...
இந்தியாவிலிருந்து 2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி - யூரியாவை விட சிறந்த பயனை வழங்கும் எ...
வேலைத்தளத்தில் இடம்பெறும் வன்முறை, துன்புறுத்தல்களை குறைப்பதற்காக இலங்கை சட்ட அமைப்பிற்கு மற்றுமொரு ...