இடது பக்கத்தால் முந்திச் செல்வதற்கான தண்டப்பணத்தை மாற்ற அரசு இணக்கம்!

இடது பக்கத்தால் முந்திச்சென்று பாதை ஒழுங்குகளை மீறும் வாகனங்களுக்கு விதிக்கப்படவுள்ள 25ஆயிரம் ரூபா தண்டப்பணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் கொழும்பில் நிதி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இடது பக்கத்தால் செல்லல் உட்பட 7 போக்குவரத்துக் குற்றச்செயல்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிக்கும் பிரேரணைகள் வரவு செலவுத்திட்ட யோசனையில் அரசாங்கம் முன்வைத்திருந்நதது குறிப்பிடத்தக்கது.
Related posts:
9 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்!
கூட்டுறவு சங்கங்கள் கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்கி சதோசவுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - வர்த்த...
2024 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள் இருக்கும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெர...
|
|