இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புதிய நேர வரையறைகள் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு!
Wednesday, June 21st, 2023இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான கால வரம்பு திருத்தப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி காலக்கெடு மாற்றப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேர வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் – வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணிவரையும், ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12.30 மணிவரையும் என திருத்தப்பட்ட காலக்கெடு வரையறுக்கப்பட்டுள்ளது
எவ்வாறாயினும், இசை நிகழ்ச்சிகள் மருத்துவமனைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு இடையில் நியாயமான இடைவெளியை பேண வேண்டும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
என் தமிழில் குற்றமா? கவலையுறமாட்டேன் – வடக்கின் ஆளுநர்
பலாலியில் இருந்து தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை - தேடும் நடவடிக்கையில் கடற்படையினர்!
சவால்கள் இருந்தால் அதனை ஏற்க பயப்பட வேண்டாம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
|
|
|


