ஆவரங்கால நவோதையை வீதி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் பிரச்சினைக்கு ஈ.பி.டி.பியின் முயற்சியால் தீர்வு!
 Friday, January 22nd, 2021
        
                    Friday, January 22nd, 2021
            
வலி கிழக்கு ஆவரங்கால நவோதையை வீதி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தொடர்ந்தும் தேங்கி நிற்பதால் குறித்த நீரை வழிந்தோடச் செய்யும் நடவடிக்கைகயை மேதற்கொண்டு தருமாறு குறித்த பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்த கோரிக்கைக்கு இணங்க அதற்கான தீர்வுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தொண்டமானாறு நன்நீர் சேகரிப்பு திட்டத்தின் காரணமாக தொண்டமானாறு பாலத்தின் பிரதான வான்கதவுகள் பூட்டப்பட்டிருப்பதனால் குறித்த பகுதியில் காணப்படும் மழை நீர் வழிந்தோட முடியாது அப்பகுதியில் தேங்கியிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பெய்த கழை காரணமாக பாலத்தின் மற்றைய பகுதியிலிருந்து வான்கதவுகளை மேவி மழை நீர் மக்கள் குடியிருப்புகளை நோக்கி வரத்தோடங்கியுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரியிருந்தனர்.
இந்நிலையில் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு நேரில் சென்றிருந்த கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு நிலைமைகளை பார்வையிட்டதுடன் அது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்திற்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.
இந்நிலயில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளர் ஐங்கரன் இராநாதன் மற்றும் தோழர் லிங்கேஸ் உள்ளிட்டோர் இன்றையதினம் தொண்டமானாறு பாலத்தின் ஊடாக நீரை சிறிதளவு கடலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        



 
         
         
         
        