ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
Wednesday, April 27th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை பதவி விலக வேண்டும். ஜனாதிபதியின் விருப்பத்துக்கமைய இடைக்கால அரசு அமைய வேண்டும்.
அதற்கு வழிவிடும் வகையிலான யோசனையொன்று ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்றைய சந்திப்பில் பேசப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 113 என்பதைவிடவும், மக்களின் கோரிக்கையே எமக்கு முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!
நுண்கடன் திட்டத்தால் வடக்கு, கிழக்கில் 78 பேர் உயிரிழப்பு!
மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை நீடிப்பு - சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
|
|
|


