ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
Monday, August 2nd, 2021
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் விசேட செயலமர்வு ஒன்று நாளை நாடாளுமன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, இடம்பெறவுள்ள நிலையில், அன்றையதினம் அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது - இந்திய உயர்ஸ்தானிகராலய...
கடன் நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் - வெளிவிவகார அமைச்சரிடம் சர்வதேச அரச ...
பாலம் உடைந்ததில் பலர் காயம் - திருகோணமலையில் சம்பவம்!
|
|
|


