ஆளும் கட்சியின் துணை கொறடாவாக சாகர காரியவசம் நியமனம்!

ஆளும் கட்சியின் துணை கொறடா பதவிக்கான நியமனக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் பிரதமரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
ஆளும் கட்சியின் துணை கொறடா பதவிக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் அதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து இன்றையதினம் நாடாளுமன்றில் வைத்து பெற்றுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து இந்நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக ஆளும் கட்சியின் துணை கொறடாவாக பதவி வகித்த ஜயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் சட்டத்தரணி சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
000
Related posts:
மருந்து கையிருப்பபை கணனிமயப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் ராஜித!
இனி பலாலியிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணிக்கலாம்!
75 வீத மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினாலும், மின்சார சபைக்கு வருடாந்தம் 45 பில்லியன் ரூபா நட்டம்!
|
|