ஆளுநர் தலைமையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வடக்கின் ஒருங்கிணைப்புக் கூட்டம்!
Sunday, December 12th, 2021
வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைதடியில் நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (தலைமையில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் காலதாமதம் அடையும் நிலைமையில் இந்த ஏற்பாட்டை ஆளுநர் மேற்கொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள் எனப் பலரும் அழைக்கப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
மேற்படி கூட்டம் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதிலும் நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு காரணமாக அது பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ய...
அதிகபட்ச விலைக் காட்சிப்படுத்தவது கட்டாயம் - இல்லையேல் சட்ட நடவடிக்கை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ அ...
|
|
|


