ஆரியகுளத்தை புனரமைத்து கொடுத்தும் யாழ் மாநகர சபைக்கு அதனை சரியாக பராமரிக்க தெரியவில்லை என குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை நாம் புனரமைத்து கொடுத்தோம். ஆனால் யாழ் மாநகர சபை அதனை பராமரிப்பதாக தெரியவில்லை எனதியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கலந்துரையாடல் மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை யாழ் மாநகர சபை சிறப்பாக பராமரித்தால் இன்னமும் பல குளங்களை புனரமைக்க தயாராக உள்ளேன்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பார்க்கும்போது சிறப்பாக பராமரிப்பார்கள் போல தெரிகிறது – என்றார்.
முன்பதாக 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் ஆரியகுளம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
20 ஆயிரம் கிலோ வெல்லத்தை உற்பத்தி செய்ய பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை!
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வருகையின்போது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை - 2 புரிந்துணர...
ஒரு இலட்சம் மணிநேரத்தை நிறைவுசெய்தது எயார்பஸ் - பிரான்ஸிடம் மீள ஒப்படைக்கிறது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ...
|
|