ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடல் – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Monday, December 14th, 2020

முன்பாடசாலைகள் மற்றும் தரம் 1 முதல் 6 வரையான மானவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடல் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றினை கருத்தில் கொண்டு முடிவு எட்டப்படும் என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் பிற சுகாதார நிபுணர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்த அவர். இந்த சந்திப்பின்போது கொரோனா தொற்று குறைந்த ஆபத்தில் உள்ள மாகாணங்களில் ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி முடிவுகளை கல்வி அமைச்சு எடுக்கும் என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உயர்தர மாணவர்களுக்கான தொண்டமனாறுப் பரீட்சைகள் நாளை ஆரம்பம் – சகல மாணவர்களையும் பரீட்சைக்கு தோற்றுமாற...
நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது - கல்வி அம...
வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டுவருவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன - ஜனாதிப...